காவி பயங்கரவாதம்

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில்

 திருப்பம்! சிக்கியது RSS

2007ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள தர்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------
புனித ரமலான் மாதத்தில் கடைசி நோன்பினை கடைப்பிடித்து நோன்பு திறப்பதற்காக அஜ்மீர் தர்கா வளாகத்தில் உள்ள பள்ளி வாசலில் முஸ்லிம்கள் குழுமி இருந்த போது சக்தி மிக்க குண்டு வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். ரமலான் மாதத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவின் ஆட்சி நடைபெற்று வந்தது. குண்டு வெடிப்பு சம்பவத் தினைத் தொடர்ந்து வழக்கம் போல் அப்பாவி முஸ்லிம் இளைய தலை முறையினரை வளைத்து பிடித்து கடும் சித்திரவதைக் குட்படுத்தினர்.பள்ளி வாசலில் பயங்கரவா தம் நிகழ்ந்தாலும் கூட அதே சமூகத் தை பழி வாங்கும் போக்கு தொடர்ந்ததை உலகெங்கும் வாழும் நடுநிலையாளர்கள் வன்மையாக கண்டித்தனர்.

அதனைத்தொடர்ந்து விசாரணை சரியான திசையில் செல்லத் தொடங்கியது. அஜ்மீர் குண்டு வெடிப்பில் காவிபயங்கரவாத சக்திகள் பின்னணியில் இருந்ததை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு படை கண்டறிந்தது. தொடர்ந்த விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயப் பட்டது.

806 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள குஜராத் ஹவுசில் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவரான இந்திரேஷ் குமார் மற்றும் ஆறு முக்கிய காவி பயங்கரவாத தலைவர்கள் கூடி அஜ்மீர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட முக்கிய குண்டு வெடிப்புகள் குறித்து சதி ஆலோசனை நிகழ்த்தியுள்ளனர்.
உண்மைகள் வெளிவரும் போது ஆர்.எஸ்.எஸ் அதனை ஒப்புக்கொள்ளவேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குறிப்பிட்டார். குண்டு வெடிப்பு தொடர்பாக சதியில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளின் பின்னணி, யார் யார் இந்த பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளனர் என்ற உண்மைகள் விரைவில் வெளியாகும். குற்றவாளி கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தப்ப முடியாது என அசோக்கெலாட் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களும் அஜ்மீர் குண்டு வெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாகவும், அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர் பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.
இந்திரேஷ் குமாரிடம் குண்டு வெடிப்பில்அவரது தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ் வழக்கில் அவரைக் குற்றவாளியாக் கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.
சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.
தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளுக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் என தீவிரவாதி இந்திரேஷ்குமார் புலம்பியுள்ளார்.
அபினவ் பாரத், ஆர்.எஸ்.எஸ் ஆகிய பயங்கரவாத ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பாட்டுத் தலங்களை களங்கப் படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த தேவேந்திர குப்தா, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்ஸாங்கரா, அபினவ் பாரத் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த லோகேஷ் சர்மா, சந்திரசேகர் லாவெ ஆகியோர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.
இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி தான் வைத்த குண்டில் ஏற்கனவே குண்டடிப்பட்டு இறந்து போனார்.
துணை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜகேந்திரகுமார் முன்பு தீவிரவாத தடுப்பு படை 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஹிந்துத் துவா பயங்கரவாதிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சந்திரசேகர் லாவெ ஆகியோர் தற்பொழுது நீதிமன்ற காவலில் உள்ளனர். சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி கல்ஸாங்கரா ஆகிய பயங்கரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியான ஹிந்துத் துவா பெண் பயங்கரவாதி பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர் களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த தேவேந்திர குப்தா சில காலம் தலைமறைவாக இருந்தார். பின்னர் நோயாளியான தனது தாயாரை காண வந்தபொழுது கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதி சந்திரசேகர் மத்தியப் பிரதேசில் வைத்து கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை 26ஆம் தேதி நடை பெறும். 133 சாட்சிகளை அரசுத் தரப்புஆஜர்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப் பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு குற்றப் பத்திரிகையில் ஹிந்துத்துவா இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியத் தலைவர்களில் ஒரு வரான இந்திரேஷ் குமாரை குற்றவாளியாக்கியதன் மூலம் அவ்வமைப்பின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.
தேசத்தின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும் ஊறுவிளைவிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அவசரத் தேவையான மத நல்லிணக்கத்தை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் தகர்த்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.

தங்கள் தவற்றினை உணர்ந்து கொள்வார்களா?
சம்பவம் நடந்த சிறிது காலத்தில் இந்த வழக்கை எடுத்து நடத்திய சி பி ஐ அஜ்மீர் குண்டு வெடிப்பு ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு உண்டு என தெரிவித்தது. உடனடியாக சொல்லிவைத் தாற்போல் நாட்டில் உள்ள அனைத்து செய்தி ஏடுகளும், தொலை காட்சி ஊடகங்களும் இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் பங்களாதேஷில் இருந்து செயல்படும் ஹூஜி இயக்கம் இருப்பதாக பரபரப்பாக செய்தி வெளியிட்டன. அதன் பிறகு வழக்கு விசாரணையின் போக்கு சரியான திசையினை நோக்கிபயணிக்கத் தொடங்கியது.

சதியின் பின்னணியில் காவி பயங்கரவாதத்தின் கோர முகம் வெளிப்பட்டது.
ஆனால் கண்ணால் பார்த்தார் போல் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எங்கிருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்தன என நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கேள்வியாவது எழுப்பியதா?

நாட்டின் வெளியில் இருந்து பயங்கரவாத சக்திகள் சதி செய்கி ன்றன என தானாகவே கூறும் சில ஊடகங்கள் செய்திகளின் தலைப்பில் விஷத்தை உமிழ்ந்தன.
எடுத்துக்காட்டாக சம்பவம் தொடர்பாக தி ஹிந்து செய்தி ஏட்டில் கட்டுரை வடித்த பிரவின் சுவாமி என்பவர் இந்த தாக்கு தலின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதிகள் இருக்கின்றனர் என பகிரங்கமாக குற்றம் [No Paragraph Style]body tex(http://www.hinduonnet.com/2007/10/12/stories/2007101261651600.htm 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி வெளிவந்த ஹிந்து பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளியானது.
ஹூஜி தீவிரவாதிகள் மற்றும் சில பயங்கர வாத அமைப்புகளை சேர்த்துக்கொண்டு இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.ஷஹீத் பிலால் என்பவர் இந்த சதியின் மூளையாக செயல் பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட சையத் சலீம் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை அப்போது தெரிவித் தது.

அதாவது குண்டு வைக்கும்போது மாட்டிக்கொண்டதாக சையத் சலீம் மீது இரக்கமற்ற கதை புனையப் பாட்டது. சையத் சலீம் முன்பு ஹைதராபாத் நகரில் வசித்தவர்.ராஜஸ்தான் காவல்துறை கூறிய குற்றச்சாட்டை ஆந்திர காவல் துறை மறுத்தது. சையத் சலீம் எத்தகைய தீவிரவாத பின்ன ணியும் கொண்டவர் அல்ல என ஆந்திர காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே 2007 அக்டோபர் 15 ஆம் தேதி ஷிஷி குப்தா என்பவர் எழுதிய கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியானது. அதில் அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஹூஜி அமைப்புக்கோ முக்கிய குற்ற வாளியாக சொல்லப்பட்ட ஷஹீத் பிலால் என்பவருக்கு எதிராகவோ உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டது.(லீttஜீ://ஷ்ஷ்ஷ்.வீஸீபீவீணீஸீமீஜ்ஜீக்ஷீமீss.நீஷீனீ/stஷீக்ஷீஹ்/228506.லீtனீறீ) அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்.எஸ்.எஸ் முக்கியதலைவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ராஜஸ்தான் காவல் துறையினர் ஏராளமான முஸ்லிம் மார்க்க மேதைகளை அஜ்மீர் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து துன்புறுத்தும் போக்கும் தொடர்ந்தது. மவ்லவி பஷீர் உத்தர பிரதேச மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 18 நாட்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டார். வழக்கம் போல் அவர் மீதான குற்றசாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என கண்டு பிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் மதரஸா ஆசிரியர் குஷ்புரஹ்மான் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டு துன்புறுத் தப்பட்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். குஷ்புர்ரஹ்மான் மீதான குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என காவல்துறை தெரிவித்தது.
இப்போது காவல்துறை, புலனாய்வுத்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படையின ருக்கு ஒரு கேள்வி. இதுவரை நியாமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை படுத்தப்பட்ட சிறுபான்மை மக்க ளுக்கு என்ன நிவாரணம், என்ன நீதி வழங்கப்படப் போகிறது என் பதை எவ்வாறு தெளிவுபடுத் தப்போகிறது மத்திய அரசு. குற்றவாளிகளை தப்ப விடாமல் தக்கத்தண்டனை வழங்கப்படுமா? நாடு காத்திருக்கிறது...