Friday, December 24, 2010

ஒபாமா வருகை: அவமானப்படுத்தப்பட்ட கர்கரேயின் தியாகம்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மும்பையில் தாக்குதலுக்குள்ளான தாஜ்மஹல் பேலஸ் ஹோட்டலில் அளித்த விருந்து நிகழ்ச்சியில் மும்பைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாவீரன் ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்தினருக்கு உரிய அழைப்பு விடுக்கப்படவில்லை.

மும்பைத் தாக்குதலுக்குள்ளான லியோஃபோர்ட் கஃபேயின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேரடியாகச் சென்று அழைப்பிதழைக் கொடுத்து விருந்திற்கு அழைப்பு விடுத்தனர்.

கஃபேயின் உரிமையாளர்களான ஃபர்ஹான் ஜஹானி மற்றும் அவருடைய சகோதரர் ஃபர்ஸாத் ஆகியோரை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தச் செய்தி வெளியானதுடன் தாக்குதலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினர் புறக்கணிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களை ஒபாமா நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மனைவிகள் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே, விஜய் சாலஸ்கரின் மனைவி ஸ்மிதாவும், அசோக் காம்தேவின் மனைவி வினீதா காம்தேவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

please enter your comments here.