Friday, December 24, 2010

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்&ஐ தடை செய்ய போதுமானது

அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ் தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கண்டுபிடித்த தகவல் கள் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண் டிய அவசியத்தை ஏற்படுத்தியுள் ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய போதுமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர். மேலும் அவர் கூறுகையில் இது தொடர்பான ஆர்.எஸ்.எஸ்&ன் வாதங்கள் அவர்களது பலவீனத்தையும் பதற்றத்தையும் காட்டுவதாக தெரிவித்தார்.

தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே ,சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள்ளிட்ட பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளின்கடந்த கால மற்றும் நிகழ்கால ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆர்.எஸ்.எஸ்&ன் குட்டி தலைவர்கள் பிடி பட்டுள்ளனர். விரைவில் இந்தரேஷ் குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பிடிபடு வார்கள் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தின் கருவ றையாக ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் செயல் படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறினார்.

காங்கிரஸ் வெறும் வாய் பேச்சளவில் இல்லாமல் நாட் டின் நலனை முன்னிட்டு தனது அறிவிப்பினை செயலில் காட்ட முன்வரவேண்டும்.ஆர்.எஸ்.எஸ்&ன் தேசிய செயற்குழுவின் உறுப்பின ரான இந்தரேஷ் குமார் போன்ற பிரமுகர்கள் பிடி பட்டிருப்பது ஆர்.எஸ்.எஸ்&ன் பங்கரவாத முக த்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.மாலே கான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்காமஸ்ஜித் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், குண்டு வெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் கைவரிசை இருப்பது நிரூபிக்கப் பட்டு விட்ட நிலையில் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது மட்டுமே சரி யான தீர்வாக இருக்க முடியும். தடை என அறிவிப்பது, பின்னர் சொதப்பலான காரணங்களை வைத்து தடைவிதிப்பது, அதனை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மிக எளிதாக உடைக்கும் வண்ணம் அரசுத்துறை சட்ட (!) மேதைகள் இது தொடர் பான விவாதங்களில் குறட்டை விட்டு தூங்குவது போன்ற நாடகங்களை இந்த நாடு ஏற்கனவே சந்தித்து விட்டது. அவையனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது. எனவே பயங்கர தேசத்துரோக குற்றங்களை இழைத்தவர்கள் தப்பித்துவிடாதபடி நடவடிக் கை எடுக்கவேண்டும் என்பதே இந்நாட்டில் வாழும் கோடானு கோடி மக்களின் வேண்டுகோளாகும்.

இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் மறு ஆய்வு செய்யவேண்டும். குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் மறு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அது மட்டும் இன்றி இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ஓரவஞ்சனையோடு குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைகளில்பல ஆண்டுகளாக வாடி வரும் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களுக்கு விரைந்து விடுதலையும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆரம்ப சூரத்தனம் காட்டாமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment

please enter your comments here.