Sunday, December 26, 2010

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி:

இந்தியாவில் பல்வேறு மதம்,மொழி மற்றும் இனங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்தியன் எங்கின்ற உணர்வோடு வாழ்கின்றனர்.இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நீண்ட கால செயல்Read more... திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றன ஆர்.எஸ்.எஸ் காவி முகாம்கள்.

ஒற்றுமையாய் வாழும் மக்களை பிரித்தாழும் சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்படற்ற முயற்சிக்கும் இவர்கள் பா.ஜ.க,விஷ்வ ஹிந்து பரிஷத்,ABVB என பல முகங்களில் பல்வேறு தளங்களில் 48 பிரிவுகளாக செயல்படுகின்றனர்.இதன் தலைமை பொறுப்புகளில் சித்பவன் பார்ப்பனர்கள் என்ற உயர் ஜாதி இந்துக்கள் மட்டும் இருந்தனர். இவர்கள் வர்ணஷ்ரம்ம கொள்கையின் மூலம் இந்துக்களை சூத்திரர்களாகவும்,தீண்டதகாதவர்களாகவும் மாற்றி அடிமை படுத்தி பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் இவற்றை தகர்த்தெறியும் விதமாய் இந்திய மண்ணில் இஸ்லாம் நிகழ்த்திய அமைதி புரட்சியால் வர்ணஷ்ரம்ம கொள்கையால் அடிமை பட்ட மக்களை விடுவித்தது.சமத்துவத்தின் பக்கம் அழைத்து செனறது.இதன் விளைவாகத்தான் காவி முகாம்கள் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் இந்த மண்ணை விட்டு அப்புற படுத்த நினைக்கிறது.இந்த கொடூர சிந்தனையின் விளைவாகத்தான் காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பல கலவரங்கள் இஸ்லாமியர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பணியில் இந்தியாவின் உளவு அமைபுகளும்,ஊடங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன காவி அமைப்புகளால். இவற்றையெல்லாம் செய்வதன் நோக்கம் ஆட்சி கைப்பற்றி இந்தியர்களை ஆதிக்கம் செலுத்தி நாட்டை சுரண்டுவதற்காக மட்டுமே….
இதை அறியாத நாம் அன்ணன்,தம்பிகளாய் மாமன்,மச்சானாய் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழ்ந்த்தை மறந்து அண்மை காலமாக வேற்றுமை பாரட்டி வருகிறோம்.இந்த நிலைமையை மாற்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் செயல்பட்டு காவி முகாம்களின் முகத்திரையை கிழிப்போம்!!! வந்தேறிகளான பார்பன கும்பல்களின் சதிகளை முறியடிப்ப்போம்!!!
அதற்கான முயற்ச்சியை இத்தளம் தொடர்ந்து செய்யும், அத்வானி வகையாறாக்களின் கபட நாடகத்தை நாட்டு மக்களிடம் வெளிபடுத்தும்…
இந்துக்களே எழுமின்! விழுமின்!!

Friday, December 24, 2010

மதக்கலவரங்கள் திடீர்திடீரென உருவாகும் மர்மம் அம்பலம்:


நாட்டில் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவை சங் பரிவாரின் அமைப்புகளால் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதை சமூகநல ஆர்வலர்கள் கவலையுடன் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் ஆளும் சக்திகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நாட்டைப் பீடித்த விஷ விருட்சங்கள் அகற்றப்படவே இல்லை.
--------------------------------------------------------------------------------
விடுதலையடைந்த காலத்திலிருந்து நான்கு தடவை ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, குறுகிய காலத்திற்குள் அந்தத் தடை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. கலவரங்களின் சூத்ரதாரிகள் தண்டிக்கப்படுவதே இல்லை.

அரசியல் ஆதாயத்திற்காக அடக்கி வாசிப்பதைப் போல காட்டிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல், வெவ்வேறு பெயரில் பயங்கரவாதத்தை நடத்தி வருகின்றன.

எடுத்துக்காட்டாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் சிவசேனா, அபினவ் பாரத் போன்றவையும், கோவாவில் சனாதன் சாஸ்தா போன்ற குண்டர் படைகளும், உ.பி. ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளும், தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளும் நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. சமூகவிரோத செயல்களை செய்பவர்கள் யாராக இருந் தாலும் சட்டத் தின் முன் நிறுத் தப்பட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடெங்கும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில் “பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடு வான்,” “கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு தாக்குப்பிடிக்க முடியும்?” போன்ற பழமொழிகளை நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.

கட்டுக்கட்டாக பணத் தைக் கொடுத்தால் எந்தப் பகுதியிலும் கலவரங்களை நிகழ்த்தி வன்முறை வெறி யாட்டங்களைக் கட்ட விழ்த்து விட்டு ரத்த ஆறு ஓடச் செய்பவர்கள்தான் ஸ்ரீராம் சேனா என்ற வெறி இயக்கத்தினர் என்ற உண்மையினை தெஹல்கா செய்தி ஏடும், ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலும் அம்பலப் படுத்தியுள்ளது.




பெங்களூருவில் முஸ்லிம் மக்கள் நிறைந்து வாழும் சிவாஜி நகரில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு (நிருபர் என தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல்) ஸ்ரீராம் சேனா தலைவன் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை ரகசிய காமிராவில் படம்பிடித்து அவர்களது வாக்குமூலங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தியதன் மூலம் ஹெட் லைன்ஸ் டுடே மற்றும் தெஹல்கா செய்தி ஏடுகள் உலகமெங்கும் உள்ள நடுநிலையாளர்களால் பாராட்டப் படுகின்றன. அதில் வன்முறையாளன், சமூகவிரோதி முத்தலிக்கின் குரூர முகம் வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து வருகிறது.

நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அனைத்திலும் ஸ்ரீராம் சேனாவின் பங்கு இருக்கிறதா என்பது பற்றி தீவிரப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. காசர்கோடு, மைசூர் மற்றும் மங்களூர் பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைக் கொலைகளில் ஸ்ரீராம் சேனா தலைவன் முத்தலிக் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய 10 வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. மங்களூர், ஹூப்ளி, மைசூர், ஷிமோகா மற்றும் கோலார் பகுதிகளிலும் ஸ்ரீராம் சேனா என்ற வன்முறை இயக்கம் கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. மைசூரில் உள்ள பள்ளிவாசலில் பன்றியின் பாகங் ‘களை வீசி முஸ்லிம்களை வேத னைக்கு உள்ளாக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிர மோத் முத்தலிக்கின் கும்பல் மீது சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டி கண்டன அலைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

நாடு முழுவதும் ஸ்ரீராம் சேனா மற்றும் அந்த கும்பலின் தலைவன் பிரமோத் முத்தலிக் மீது எழுந்துள்ள எதிர்ப்பினைத் தொடர்ந்து முத்தலிக்கிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் (வழக்கம்போல்) நழுவத் தொடங்கியுள்ளன.

முத்தலிக்கின் பின்னணி

நீங்கள் சரியான காசை பேசியபடி கொடுத்தால் போதும். இந்தியாவில் எந்த மூலையிலும் கலவரங்களை நிகழ்த்த ஸ்ரீராம் சேனையால் முடியும். இந்த உண்மையை புஷ்ப் சர்மாவும், அவருக்குத் துணையாக தெஹல்கா செய்தி ஏட்டின் சஞ்சனா மற்றும் ஆசிஸ் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மங்களூர் பஃப்அட்டாக் என யூடியூப் வலைதளத்தித் தேடலில் 133 வீடியோ காட்சிகள் உள்ளன. பிரமோத் முத்தலிக் கூலிப்பட்டாளத்தின் முதல் வன்முறையை மட்டும் இதுவரை 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். கூகுள் தேடலில் மட்டும் 69 ஆயிரம் வலைதளங்களில் முத்த லிக் கூட்டத்தின¢வன்முறைக் காட்சிகளை காண முடியும்.

2007&ம் ஆண்டு ஸ்ரீராம் சேனை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து அந்த அமைப்பின் அகில இந்தியத் தலைவராக(!) முத்தலிக் இருந்து வருகிறார். இவர் 13&ம் வருடத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி பெற்றவர்.

1996&ம் ஆண்டிலிருந்து பஜ்ரங்தள் அமைப்பின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர் ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருங்கிய தொடர் புடையவராகவே எப்போதும் இருந்துள்ளார். 2008&ல் ஸ்ரீராம் சேனையின் அரசியல் பிரிவாக ராஷ்ட்ரிய ஹிந்துஸ்தான் சேனா என்ற பெயரில் அரசியல் கட்சி கண்டார். 2008 கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் படுதோல்விகண்ட இவர் “பணம் இல்லாததால் தோல்வியடைந்தேன்” என புலம் பியிருக்கிறார். அதன்பிறகு பணத் திற்காக கலவரங்களை செய்யும் கூலிப்படையின் தலைவன் ஆனார்.





மதவெறியை பயன்படுத்தி வன் முறை நிகழ்த்துவதால் இவர் வாங்கும் பணம் போன்றவை கண்காணிப்புக்கு உள்ளாக வில்லை. ஹிந்துத்துவத்தை முன்னி றுத்துவதால் அரசியல் அரங்கில் ராஜமரியாதை கிடைத்தது.

2004 ஆக்ஸ்ட் 24&ம் தேதி டெல்லியில் சஹமத் அமைப் பினரால் நடத்தப்பட்ட கண் காட்சியில் ஓவியர் எம்.எஃப் ஹூசேனின் ஓவியங்கள் தாக்கப் பட்டன. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை யாராவது தாக்கினால் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இரண்டு மடங்குகளாக தாக்குவோம் என வெறிக் கருத்துக்களை உதிர்த்தவர்.

2009&ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் (சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்) ஹூப்ளியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். நாகராஜ் ஜம்பகி என்பவன் குண்டுவெடிப்புக் கும் பலின் தலைவன் ஆவான்.

இவனுக்கும் முத்தலிக்குக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு.

2009 ஜூலை மாதம் நாகராஜ் ஜம்பகி மர்மமான முறையில் பாகல்கோட் சிறையில் கொல்லப் படுகிறான்.

குண்டுவெடிப்பு மர்மம், குண்டு வெடிப்பு குற்றவாளி நாகராஜ் ஜம்பகியின் மர்மக்கொலை போன்றவை குறித்தும் அதில் முத்தலிக்கின் பங்கு குறித்தும் எந்தவித விசாரணையும் இது வரை மேற்கொள்ளப்பட வில்லை என்பது விடை தெரியாத வினாக் களாகவே விடைத்து நிற்கின்றன.

2009 ஜூலை மாதம் ஒரு ஹிந்து சமய திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முஸ்லிம் குடும்பங்களை ஸ்ரீராம் சேனை யினர் தாக்கினர். குறிப்பாக ஹிந்து இளம் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முத்தலிக் போன்ற கொடூரன்களின் உள்ளத்தில் உதயமான குயுக்தியான வியூக சொல் “லவ் ஜிஹாத்” ஆகும்.

இந்த ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஸ்ரீராம் சேனை உள்ளிட்ட வானரக் கூட்டங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கூட்டம் லவ் ஜிஹாத் விவகாரத்தில் கடுமையாக அம்பலப்பட்டு மூக்கறுக்கப்பட்டு நின்றது.

லவ் ஜிஹாத் என்பதே ஒரு தவறான கற்பிதம் என்பதை புலனாய்வுத் துறையினர் வெட்ட வெளிச்சமாக்கினர்.

இத்தகைய சீரும்(!) சிறப்பும்(!) பேரும்(!) புகழும்(!) பெற்ற முத்தலிக் தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ்டுடே வியூக வலைக்குள் வகையாக சிக்கிக் கொண்டார்.

முதன்முதலாக ஹூப்ளியில் உள்ள ஸ்ரீராம் சேனை அலுவல கத்தில் முத்தலிக்கை சந்தித்த தெஹல்கா செய்தியாளர், ஹுசை னின் ஓவியக் கண்காட்சி போன்ற ஒன்றைத் தாக்க வேண்டும் எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸாக கொடுக்கிறார். ஒரு சிறு மறுப்புக் கூட தெரிவிக்கவில்லை முத்தலிக். ரூபாய் நோட்டுகள் உடனடியாக முத்தலிக்கின் பாக்கெட்டுக்குள் பத்திரமாக அடைக்கலம் சென்றது.

இனி முத்தலிக் சிக்கிய சாட்சி களை கண்களால் பருகி மனதினுள் ஓட விடுங்கள்.

தெஹல்கா செய்தியாளர்: ஓர் ஓவியன் போல் வேடமிட்டு முத்த லிக்கை சந்திக்கச் செல்கிறார். அவர் ஒரு ஓவியக்கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அந்த ஓவியக் கண்காட்சியை ராம் சேனை குண்டர்கள் தாக்கினால் அதனை வைத்தே பிரபலமாகி விடலாம் எனக் கூறுகிறார். அவர்கள் இந்தப் பிரச்சனை பெரியதாக வேண்டுமானால் அந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பெருமளவில் இருக்க வேண்டும் என்று முத்தலிக் உடன் இருந்த தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இனி அந்த உரையாடல்கள்

தெஹல்கா நிருபர்: நான் பிரபல மானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்ய உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவை? நான் எவ்வளவுபணம் உங்களுக்குத் தர வேண்டும்-? இந்தக் கலவரம் தொடர்பாக நான் காவல்துறையிடம் முறையீடு செய்ய மாட்டேன். முக்கியமாக எவ்வளவு பணம் வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என படபடக்கிறார் தெஹல்கா செய்தியாளர்.

அதற்கான வேலையை பெங்களூருவிலேயே செய்து விடலாம் என முத்தலிக் சம்மதிக் கிறார்.

தெஹல்கா நிருபர்: சார் இதை நான் உறுதிப்படுத்த வேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சிலநாட்கள் கழித்து வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்கும் என்று தெரிந்தால் நான்¢அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தலிக் : நான் சொல்லவருவது என்னவெனில் எங்கள் லோக்கல் தலைவர்......

தெஹல்கா நிருபர்: பெங்களூரிலா?

முத்தலிக்: ஆமாம், அங்குதான் வசந்தகுமார் என்ற பெரிய கை. அவரைத் தெரியுமா உங்களுக்கு?

(கடைசியில் முத்தலிக் கலவரத் தை நடத்த ஒத்துக்கொண்ட பிறகு அதற்கான கூலியை நிர்ணயம் செய்வதுதான் அவர்களின் மீதி வேலை. அது தொடர்பாக முத்தலிக்கின் அடி யாள் படைத்தளபதிகளான பிரசாத் அட்டாவர் (ஸ்ரீராம் சேனையின் துணைத் தலைவராம்) வசந்தகுமார் பவானி(பெங்களூரு நகரத் தலைவர்) இருவரையும் சந்திக்குமாறு முத்தலிக் கோரவே பிரசாத் அட்டாவரை சிறையில் சந்திக்கிறார் தெஹல்கா செய்தி யாளர்.)

தெஹல்கா செய்தியாளர்: நாங்கள் 15 லட்ச ரூபாய் கொடுத்து விடுகிறோம்.

பிரசாத் அட்டாவர்: ஓகே. இருந் தாலும் நான் கணக்கு பார்த்து சொல்லுகிறேன்.

(செய்தியாளர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இரண்டு தடவையும் பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்துப் பேசுகி றார்கள். பெங்களூர் பஃப்பில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் போல செய்து விடலாமென உறுதி கூறுகிறார் அட்டாவர்.

எவ்வளவு பணம் வேண்டு மென்றும் பிறகு சொல்வதாக அட்டாவர் கூறுகிறார்.

தெஹல்கா செய்தியாளர்: கலவரத் திற்கு எத்தனை பேரைக் கொண்டு வருவீர்கள்?

பிரசாத் அட்டாவர்:- ஐம்பது பேர்.



தெஹல்கா செய்தியாளர்: கலவரம் செய்ய 50&பேர் வருவார்கள் என சொல்றீங்களா?

அட்டாவர்: மங்களூர் பஃபில் நடந்ததைப் போலத்தான். கலவ ரத்தை எப்படி கச்சிதமாக நடக்க வேண்டுமென்று சொல்கிறார் சேனாவின் பெங்களுர் தலைவர் பவானி. அவரது உரையாடலில்.

பவானி: கண்காட்சி திறப்பு விழாவிற்கு மும்தாஜ் அலியைத் தானே கூப்பிடப் போகிறீர்கள்?

தெஹல்கா செய்தியாளர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாடக வக்ஃப்போர்டு உறுப்பினர். (முத்த லிக் தனது இமேஜ் டேமேஜ் ஆகக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.)

முத்தலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ நெறிகளின் ஆதரவாளன் என சமூகத்தில் பெரிய இமேஜ் எனக்கு இருக்கிறது.

தெஹல்கா செய்தியாளர்: சார் இது யாருக்கும் தெரியாது.

தெஹல்கா செய்தியாளர்: எம்.எஃப் ஹுஸைன் மற்றும் பிற ருடைய கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அதுபோல என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ மங்களூருவிலோ இல் லை. முஸ்லிம் அதிகமாக வாழும் எந்த ஏரியாவாகவும் இருக்கலாம்.

முத்தலிக்: மங்களூர், பெங்களூரு இரண்டிலும் எங்களால் வன் முறையை நிகழ்த்த முடியும்.

தெஹல்கா செய்தியாளர்: ஒரு 60 லட்சம் போதுமா?

முத்தலிக்: இதை யார் உங்களுக்குச் சொன்னார்கள்? பணத்தைப் பற்றி நான் உறுதி சொல்ல முடியாது. அது ஸ்ரீராம் சேனையின் மற்ற தலைவர்களின் வேலை; அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என முடித்துக் கொள்கிறார்
கூலிப்படைத் தலைவன் பிரமோத் முத்தலிக்.

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்&ஐ தடை செய்ய போதுமானது

அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ் தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கண்டுபிடித்த தகவல் கள் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண் டிய அவசியத்தை ஏற்படுத்தியுள் ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய போதுமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர். மேலும் அவர் கூறுகையில் இது தொடர்பான ஆர்.எஸ்.எஸ்&ன் வாதங்கள் அவர்களது பலவீனத்தையும் பதற்றத்தையும் காட்டுவதாக தெரிவித்தார்.

தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே ,சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள்ளிட்ட பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளின்கடந்த கால மற்றும் நிகழ்கால ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆர்.எஸ்.எஸ்&ன் குட்டி தலைவர்கள் பிடி பட்டுள்ளனர். விரைவில் இந்தரேஷ் குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பிடிபடு வார்கள் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தின் கருவ றையாக ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் செயல் படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறினார்.

காங்கிரஸ் வெறும் வாய் பேச்சளவில் இல்லாமல் நாட் டின் நலனை முன்னிட்டு தனது அறிவிப்பினை செயலில் காட்ட முன்வரவேண்டும்.ஆர்.எஸ்.எஸ்&ன் தேசிய செயற்குழுவின் உறுப்பின ரான இந்தரேஷ் குமார் போன்ற பிரமுகர்கள் பிடி பட்டிருப்பது ஆர்.எஸ்.எஸ்&ன் பங்கரவாத முக த்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.மாலே கான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்காமஸ்ஜித் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், குண்டு வெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் கைவரிசை இருப்பது நிரூபிக்கப் பட்டு விட்ட நிலையில் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது மட்டுமே சரி யான தீர்வாக இருக்க முடியும். தடை என அறிவிப்பது, பின்னர் சொதப்பலான காரணங்களை வைத்து தடைவிதிப்பது, அதனை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மிக எளிதாக உடைக்கும் வண்ணம் அரசுத்துறை சட்ட (!) மேதைகள் இது தொடர் பான விவாதங்களில் குறட்டை விட்டு தூங்குவது போன்ற நாடகங்களை இந்த நாடு ஏற்கனவே சந்தித்து விட்டது. அவையனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது. எனவே பயங்கர தேசத்துரோக குற்றங்களை இழைத்தவர்கள் தப்பித்துவிடாதபடி நடவடிக் கை எடுக்கவேண்டும் என்பதே இந்நாட்டில் வாழும் கோடானு கோடி மக்களின் வேண்டுகோளாகும்.

இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் மறு ஆய்வு செய்யவேண்டும். குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் மறு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அது மட்டும் இன்றி இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ஓரவஞ்சனையோடு குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைகளில்பல ஆண்டுகளாக வாடி வரும் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களுக்கு விரைந்து விடுதலையும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆரம்ப சூரத்தனம் காட்டாமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

ஒபாமா வருகை: அவமானப்படுத்தப்பட்ட கர்கரேயின் தியாகம்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மும்பையில் தாக்குதலுக்குள்ளான தாஜ்மஹல் பேலஸ் ஹோட்டலில் அளித்த விருந்து நிகழ்ச்சியில் மும்பைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாவீரன் ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்தினருக்கு உரிய அழைப்பு விடுக்கப்படவில்லை.

மும்பைத் தாக்குதலுக்குள்ளான லியோஃபோர்ட் கஃபேயின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேரடியாகச் சென்று அழைப்பிதழைக் கொடுத்து விருந்திற்கு அழைப்பு விடுத்தனர்.

கஃபேயின் உரிமையாளர்களான ஃபர்ஹான் ஜஹானி மற்றும் அவருடைய சகோதரர் ஃபர்ஸாத் ஆகியோரை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தச் செய்தி வெளியானதுடன் தாக்குதலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினர் புறக்கணிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களை ஒபாமா நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மனைவிகள் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே, விஜய் சாலஸ்கரின் மனைவி ஸ்மிதாவும், அசோக் காம்தேவின் மனைவி வினீதா காம்தேவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்:


இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-&இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய ரகசிய சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னதான் அமெரிக்க ஆதரவு பரப்புரை நிகழ்த்தினாலும் மத வாத காவி பயங்கரவாதம் குறித்தும் அதன் கொடூரங்கள் குறித்தும் தொடர்ந்து அதன் தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இஸ்ரேல் அதிகார வர்க்கத்தினருக்கு நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் சர்வதேச பாசிஸ்டுகள் உள்நாட்டு பாசிஸ்டுகளோடு கரம் கோர்த்திருப்பதாகவே நடுநிலையாள ர்கள் கருதுகிறார்கள்.

பயங்கரவாத (!) தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் ஏற்படுத் தியுள்ள நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவி முகாமின் தீவிர தலைவர்கள் பார்வையிட்டதோடு இஸ்ரேலின் விமான வியாபார மையங்களைப் பார்வையிடும் திட்டமும் உள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.